Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீனவர் பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு!

மீனவர் பிரச்னை தொடர்பாக அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 2ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டார். தமிழக மீனவர் பிரச்னை தொடர்பாக இலங்கை அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தற்போது முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை, அடுத்த வருடம் ஜனவரி 2ம் தேதி நடைபெற உள்ளதாகவும், அதில் இலங்கை அரசிடம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், தனிஷ்கொடியில் போடப்பட்ட புதிய சாலைக்கு ஏற்கனவே 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் சாலை முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும், அதனால், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 50 கோடி ரூபாயையும் சேர்த்து, மொத்தமாக 63 கோடி ரூபாய் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் உள்ள கலாமின் வீட்டிற்குச் சென்ற அவர், சமீபத்தில் நூறாவது பிறந்த நாள் கொண்டாடிய கலாமின் சகோதரர் முஹம்மது முத்துமீரா மரைக்காயருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

- இரா.மோகன் 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close