Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருடிய பர்ஸில் 500 ரூபாய் நோட்டுகள், கடுப்பான திருடர்கள்..!

எட்டாம் தேதி இரவிலிருந்து புழக்கத்தில் இருக்கும் ரூ.500 மற்றும் ரூ.1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அன்றிரவு, டெல்லிக்கு பக்கத்தில் இருக்கும் நொய்டாவில், இரண்டு திருடர்கள் பைக்கில் வந்து விகாஸ் என்பவரிடம் பர்ஸை பறித்துச் சென்றுள்ளனர். அந்த பர்ஸில் மூன்று 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருக்கவே, கடுப்பான திருடர்கள் திருடியவரிடமே பர்ஸை கொடுத்து, ஏன் நூறு ரூபாய் வைத்திருக்கவில்லை என்று கேட்டு அடித்துவிட்டுச் சென்றுள்ளனர்.


இது பற்றி,'அவர்கள் என் பர்ஸை திருடி சென்றுவிட்டார்கள் என்று நினைத்த போது, திரும்ப வந்து பர்ஸை என்னிடமே தூக்கி எறிந்து, ஏன் 100 ரூபாய் பர்ஸில் இல்லை என்று கேட்டு அடித்தனர்.' என்று விகாஸ் கூறினார்.


இது பற்றி அவர் காவல் துறையினரிடம் எந்த புகாரும் அளிக்கவில்லை.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ