Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நதிநீர் பங்கீட்டு பிரச்னையில் பஞ்சாப் அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 

பஞ்சாப் அரசின் சட்லெஜ்-யமுனா நதிநீர் இணைப்பு கால்வாய் திட்ட அரசாணை செல்லாது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் ரவி- பியாஸ்-சட்லஜ் ஆகிய நதிகள் ஓடுகின்றன. இவற்றில் ரவி- பியாஸ் நதிகளின் நீரை பக்கத்து மாநிலங்களான அரியானா மற்றும் ராஜஸ்தானுக்கு பஞ்சாப் பகிர்ந்து கொள்ள மறுப்பு தெரிவித்தது. மேலும் அரியானா-ராஜஸ்தான் மாநிலங்களுக்கு நதிநீரை பங்கீடு செய்யும் ஒப்பந்தத்தை ரத்து செய்து பஞ்சாப் அரசின் ’2004 பஞ்சாப் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது.
 
 இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த நதிநீர் பங்கீட்டு தொடர்பான வழக்கில், பஞ்சாப் அரசின் சட்லெஜ்-யமுனா நதிநீர் இணைப்பு கால்வாய் திட்ட அரசாணை செல்லாது என தீர்பளித்துள்ளது. அரியானாவுக்கு நதிநீர் பங்கீட்டை தடை செய்வது சட்டவிரோதமானது என்றும்  2004 பஞ்சாப் சட்டம் செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பஞ்சாப்பின் அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  ராஜினாமா செய்துள்ளனர் . மேலும்,அம்மாநில காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான அமரீந்தர் சிங்கும் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ