Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சைரஸ் மிஸ்த்ரி நம்பிக்கை துரோகி: டாடா குற்றச்சாட்டு

சைரஸ் மிஸ்த்ரி நம்பிக்கை துரோகி என டாடா குற்றம் சாட்டியுள்ளது.டாடா குழும தலைவராக இருந்த சைரஸ் மிஸ்த்ரி நீக்கப்பட்டு மீண்டும் ரத்தன் டாடா தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சைரஸ் மிஸ்த்ரியின் செயல்பாடுகள் குறித்து டாடா இன்று விளக்கமளித்துள்ளது. அதில், "கடந்த நான்கு ஆண்டுகளில் மிஸ்த்ரியின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருந்தது. நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர அவர் முயற்சி செய்தார். அவரை தலைவராக நியமித்த பிறகு, டாடா நிறுவனங்களின் கடன் அதிகரித்தது. டாடாவின் பங்குகள் குறைந்தது. குறிப்பாக அவரது பணி காலத்தில் டாடா குழுமத்தின் கடன் 69,877 கோடி அதிகரித்து, ரூ.2,25,740 கோடியாக உள்ளது. மிஸ்த்ரி டாடா குழுமத்துக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்" என்று கூறியுள்ளது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை சைரஸ் மிஸ்த்ரி தரப்பு மறுத்துள்ளது. முக்கியமாக டாடா குழுமத்தின் குற்றச்சாட்டுகள் தரம் தாழ்ந்தவை, அரைகுறையானவை என மிஸ்த்ரி தரப்பு விளக்கமளித்துள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close