Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் மத்திய அரசு  கேவியட் மனுதாக்கல்

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சங்கர்லால் பாண்டே மற்றும் விவேக் நாராயண் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று இந்த மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.  

இந்நிலையில் ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் மத்திய அரசின் கருத்தை கேட்காமல் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என மத்திய அரசு சார்பில் இன்று அவசரமாக கேவியட் மனு தாக்கல் செய்பப்பட்டுள்ளது.  எனவே ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் மத்திய அரசின் கருத்தை கேட்காமல் உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. 

எடிட்டர் சாய்ஸ்