Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.சி.எஸ். இடைக்காலத் தலைவர் இஷாத் உசைன்... தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்!

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இருந்த மிஸ்திரி,  அக்டோபர் 24-ம் தேதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் டிசிஎஸ் நிறுவனத்துக்கும் தலைவராக இருந்து வந்தார். மிஸ்திரி நீக்கத்திற்குப் பிறகு டாடா குழுமத்தின் இடைக்கால தலைவராக மீண்டும் ரத்தன் டாடாவே பொறுப்பேற்றார். புதிய தலைவரை இயக்குநர்கள் குழு தேடி வரும் நிலையில், மிஸ்திரி வகித்து வந்த டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு இஷாத் உசைன் நியமிக்கப்பட்டுள்ளார். 

டாடா குழுமத்துக்கு பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் நிறுவனம் டி.சி.எஸ்தான். இதனால் அதன் நிர்வாகப் பொறுப்புகளைத் திறம்பட கொண்டு செல்ல, அதற்கு திறமையான தலைவர் அவசியம் தேவை. இந்த நிலையில் டி.சி.எஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இஷாத் உசைன் பற்றி 10 தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.

1. இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டில் பிறந்த இவர், டெல்லியில் உள்ள தி டூன் ஸ்கூல் என்ற பள்ளியில் படித்தார். பின்னர் டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டப் படிப்பு படித்தார். 

2. பின்னர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் சார்ட்டர்ட் அக்கவுன்டன்டாக இருந்துள்ளார். மேலும் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் அட்வான்ஸ்டு மேனேஜ்மென்ட் புரோகிராமில் கலந்து கொண்டுள்ளார். 

3. 1983-ல் இந்தியன் ட்யூப் என்ற நிறுவனம் டாடா ஸ்டீல் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதில் இருந்து, இவர் டாடா குழுமத்தில் பணிபுரிகிறார். 

4. டாடா சன்ஸ் இயக்குநர்கள் குழுவின் நிர்வாக இயக்குநராக ஜூலை 1, 1999-ல் நியமிக்கப்பட்டார்.

5. 2000-ல் டாடா சன்ஸ் லிமிடெட்டின் நிதி இயக்குநராக ஆனார். 

6. டாடா சன்ஸ் குழுவில் இணைவதற்கு முன் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஃபைனான்ஸ் பிரிவின் மூத்த துணைத் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்கிறார். 

7. டாடா சன்ஸ் குழுமத்தின் இயக்குநர் குழுவில் ஒருவராக இருந்த அதே நேரம்,  வோல்டாஸ் லிமிடெட் மற்றும் டாடா ஸ்கை நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். 

8. மேலும் டாடா குழுமத்தின் பிற நிறுவனங்களான டாடா ஸ்டீல், டாடா இண்டஸ்ட்ரீஸ், டாடா டெலி சர்வீசஸ், டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் இயக்குநர் குழுக்களிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார். 

9. நவம்பர் 2006ல் உசைன்,  மும்பைப் பங்குச் சந்தையின் பொது ஆர்வலர் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 

10. 2008 ஜனவரியில் இந்திய கலைகளுக்கான ஃபவுண்டேஷனின் ட்ரஸ்ட்டிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார். 

டாடா குழும செயல்பாடுகள் மற்றும் தொழிலில் இவருக்கு 33 வருடங்கள் அனுபவம் உள்ளது. 69 வயதான இஷாத் உசைன், டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், சிறப்பாக செயல்படுவார் என்று டாடா குழும இயக்குநர்கள் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

- ஜெ.சரவணன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close