Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குப்பையான 500, 1000 ரூபாய் நோட்டுகள்.. இனி என்னவாகும்?

ங்கிகளில் குவியல் குவியலாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் குவிந்து கிடக்கின்றன. இத்தனை வருடங்களாக பெரும் மதிப்பு மிக்க ஒன்றாகப் பார்க்கப்பட்ட இந்த நோட்டுகள், இன்று குப்பைக்கு நிகராக வங்கிகளில் தேங்கியுள்ளன. மதிப்பை இழந்த பழைய ரூபாய் நோட்டுக்களை என்ன செய்வார்கள்? என்ற கேள்வி வங்கிகளிலும், ஏ.டி.எம்.,களில் வரிசைகட்டி நிற்கும் மக்களிடம் எழுந்திருக்கிறது.

கடந்த மார்ச் 31 வரை கணக்கின்படி, மொத்தம் 9,026.6 கோடி ரூபாய் நோட்டுகள் ( இது நோட்டுகளின் எண்ணிக்கை மட்டும்) மக்களிடம் புழக்கத்தில் இருந்துள்ளன. இதில் 2,203 கோடி நோட்டுகள், அதாவது 24 சதவிகித நோட்டுகள் தற்போது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளன. இவைகள் எல்லாமே 1000, 500 ரூபாய் நோட்டுகள்தான். இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள தகவல்களின் படி, 9,026.6 கோடி ரூபாய் நோட்டுகளின் மதிப்பு  ரூ 17.77 லட்சம் கோடி ரூபாயாகும்.

இந்த நிலையில் நவம்பர் 9-ம் தேதி நள்ளிரவில் இருந்து, மக்களிடம் அதிக அளவில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2,203 கோடி நோட்டுகளை திடீரென செல்லாது என அறிவித்ததையடுத்து, மக்களிடம் பெரும் குழப்பங்களும், கேள்விகளும் எழுந்தன. தற்போது மக்கள் மெல்ல தெளிவடைந்துவரும் நிலையில், 2,203 கோடி நோட்டுகள் இனி என்னவாகும் என்ற கேள்வி சாமானியர்கள் மத்தியில் இயல்பாக எழுந்துள்ளது.

பழைய அழுக்கடைந்த நோட்டுகளை குறிப்பிட்ட கால இடைவெளிகளுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி அழித்து விடும். அதன்படி இப்போது செல்லாமல் போன 500,1000 ரூபாய் நோட்டுகளை அழிக்க ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள். மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணம், செல்லாக்காசுகள் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் டெபாசிட் செய்யப்படும். 'நாணய சரிபார்ப்பு மற்றும் செயலாக்க இயந்திரம்' மூலம் ரூபாய் நோட்டுகள் போலி அல்ல என்பது உறுதிப்படுத்தப்படும். நாணய சரிபார்ப்பு மற்றும் செயலாக்க இயந்திரம் 2003-ல் ரிசர்வ் வங்கிகளில் அமைக்கப்பட்டது.

இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்துக்கு 60,000 நோட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து ஆராயும் தன்மை கொண்டது.  நோட்டுகளில் உண்மைத் தன்மையை அறிந்தபின்பு, நல்ல நோட்டுகள் பிரித்து வைக்கப்பட்டு முதலில் கள்ளநோட்டுகள் அழிக்கப்படும். நல்ல நோட்டுகள்  மறுசுழற்சிப்படி புதிய ரூபாய் நோட்டுக்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும். அத்துடன்  பேப்பர் வெயிட், காலண்டர், பைல்கள் போன்றவை தயாரிக்கவும் ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்படுகிறது. 2001 வரையில் பழைய மற்றும் கிழிந்த நோட்டுகளை எரிக்கும் முறையையே ரிசர்வ் வங்கி செயல்படுத்தி வந்தது. சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படாவண்ணம் தற்போது மறுசுழற்சி முறையினை ரிசர்வ் வங்கி பயன்படுத்துகிறது.

செல்லாமல் போன நோட்டுகள் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கே வரவுள்ளது.

-ஆ.நந்தகுமார்

படம்: தே.அசோக்குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close