Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 விஷயங்களில் மக்கள் நேர்மையை கடைபிடிக்கவே மோடி அதிரடி - வெங்கையா நாயுடு

வெங்கையா

கறுப்பு பண முதலைகளை ரூபாய் நோட்டில் உள்ள காந்தியின் கண்ணாடி பார்த்துக்கொண்டுதான் இருப்பதாக டெல்லியில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் பொருளாதார பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு (Economic Editors’ Conference ) நவம்பர் 10 மற்றும் 11 இரண்டு நாட்கள் நடக்கிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது:

"பிரதமர் மோடி கறுப்புப் பணம் மீது போர் தொடுத்து இருக்கிறார். பிரதமர் மோடி மூன்று மந்திரங்களை சொல்லி இருக்கிறார். சீர்திருத்தம், திறமையாக செயல்படுதல் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்துதல் ஆகியவை தான் அந்த மூன்று மந்திரங்கள்.

பொதுமக்கள் உடலையும், மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்வதுபோல் பணத்தை சம்பாதிப்பதிலும் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவே  மத்திய அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்தியா மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. வெளிநாட்டு முதலீடும், அந்நியச் செலாவணி கையிருப்பும் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தும் பொதுமக்களை சென்றடைவதற்காகத்தான் இந்த கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம். உங்கள் கையில் நல்ல பணமாக இருந்தால் அது செல்லும். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், கணக்கில் உள்ள பணத்திற்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. விவசாய வருமானத்திற்கு வரி எதுவும் இல்லை. இந்தியாவில் கறுப்பு பண செயல்பாட்டைத் தவிர ரயில், விமானம் என அனைத்து சேவைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

புதிய ரூபாய் நோட்டில் காந்தியின் கண்ணாடி உள்ளது. அந்த கண்ணாடி கறுப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளவர்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது." என்று வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

-சி.சரவணன்

எடிட்டர் சாய்ஸ்