Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொலிஜியம் பரிந்துரைத்த 34 நீதிபதிகள் நியமனம்!

கொலிஜியம் (collegium) பரிந்துரைத்த 77 நீதிபதிகளில் 34 நீதிபதிகள், உயர் நீதிமன்றங்களுக்கு  நியமனம் செய்யப்பட்டுள்ளதாக  உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

நீதிபதிகளை அரசு தேர்ந்தெடுக்கக் கூடாது என்றும், கொலிஜியம் முறைப்படியே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட தேர்வுக் குழுவான கொலிஜியம்,  காலியாக உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி பணியிடங்களை நிரப்ப , 77 பேர் கொண்ட பட்டியலை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. 

ஆனால் மத்திய அரசு, கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை பதவியில் அமர்த்தவில்லை என்று பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது கொலிஜியம் பரிந்துரைத்த 77 நீதிபதிகளில், 34 நீதிபதிகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. மேலும் 43 நீதிபதிகள் பெயர்களை மறு பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வழக்கு நவம்பர் 18 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நவம்பர் 15 ம் தேதி கொலிஜியம் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close