Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூபாய் நோட்டை மாற்ற வரிசையில் நின்ற ராகுல் காந்தி

டெல்லியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் பணம் மாற்றுவதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நீண்ட வரிசையில் நின்றார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு,  பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். மேலும், இந்த பணத்தை டிசம்பர் 30 ம் தேதி வரை வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள், பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்தும், மாற்றியும் வருகின்றனர். பொதுமக்கள் மட்டுமின்றி தற்போது அரசியல்வாதிகளும் மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் நின்று பணத்தை மாற்றியும், செலுத்தியும் வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இன்று பிற்பகல் டெல்லியில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு, பணம் மாற்றிக்கொள்ள வந்தார். கூட்டத்தோடு வரிசையில் நின்றார். அப்போது, அங்கிருந்தவர்கள் ஆர்வத்தோடு ராகுல் காந்தியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், " மக்களின் துயரத்தை பகிர்ந்து கொள்ளவே வரிசையில் நின்று 4000 ரூபாய் எடுக்க வந்துள்ளேன். மோடி அரசும் இதை உணர வேண்டும். மக்களின் சிரமத்தை உணர்கிறேன்." என்றார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ