Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கட்ஜூவுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கியது உச்சநீதிமன்றம்

முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூவுக்கு உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

கேரளாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு சவுமியா என்ற இளம் பெண் ஓடும் ரயிலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் கைது செய்யப்பட்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவிந்தசாமியின் மரண தண்டனை குறைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவுமியாவின் பெற்றோர் மற்றும் கேரள அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். 


மேலும் இந்த வழக்கு தொடர்பாக  முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ உச்ச நீதிமன்ற நீதிபதிகளை விமர்சனம் செய்திருந்தார். இது தொடர்பாக விளக்கமளிக்க, கட்ஜூ இன்று உச்சநீதி மன்றத்தில் ஆஜரானார். இதைத் தொடர்ந்து கட்ஜூவுக்கு உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கியது. இது தொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அவரை நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றவும் ஆணையிட்டது. நீதிபதி ஒருவருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ