Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா-ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது 

இந்தியா-ஜப்பான் இடையே ஆறு வருடங்களாக இழுபறியில் இருந்த மிக முக்கியமான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.  

மூன்று நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை இன்று சந்தித்து பல்வேறு துறைகள் பற்றி ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது அனுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. 

வழக்கமாக  ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் (Non-Proliferation Treaty)  கையெழுத்திடாத நாடுகளுடன், ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வது இல்லை. இந்தியா, ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் கையெழுத்திடாத நாடு என்ற போதிலும் இருநாட்டு நட்பை கருத்தில் கொண்டு ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் அணுசக்தி மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு ஜப்பான் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ