Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுங்கச்சாவடிகளில் மேலும் 3 நாட்களுக்கு கட்டணம் ரத்து!

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் மேலும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.


ரூபாய் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் இன்று இரவு வரை கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் புதிய ரூபாய் தாள்களை பெறுவதில் ஏற்பட்டுள்ள சிரமத்தை தொடர்ந்து,  நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் மேலும் 3 நாட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அதன்படி வருகின்ற 14-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாது.

எடிட்டர் சாய்ஸ்