Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மின்சார வாரியம், குடிநீர் வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

மின்சார வாரியம், குடிநீர் வரி கட்டணங்களை செலுத்த மேலும் 3 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்ததையடுத்து புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளன. இந்நிலையில் குடிநீர் வரி மற்றும் மின்சார கட்டணத்தை செலுத்த இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது மக்களின் நலனுக்காக குடிநீர் வரி, மின்சாரம் கட்டணம் செலுத்த மேலும் 3 நாட்களுக்கு கால அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி மேலும் 3 நாட்களுக்கு வருகின்ற 14-ஆம் தேதி வரை குடிநீர் வரி மற்றும் மின்சார கட்டணத்தை செலுத்தலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ