Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு! - திருமாவளவன்



 

தமிழக அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "முதல்வர் ஜெயலலிதா நல்ல உடல் நிலையுடன் இருந்த போது மத்திய அரசின் ஜி.எஸ்.டி, உணவுப் பாதுகாப்பு மசோதா ஆகிய திட்டங்களை எதிர்த்து வந்தார். ஆனால், தற்போது அனைத்துத் திட்டத்திற்கும் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், மத்திய அரசு தமிழக அரசின் நிர்வாகத்தில் தலையிடுகிறது என்ற சந்தேகம் தற்போது அளித்துள்ளதைக் காட்டுகிறது.

தஞ்சாவூர் அரவக்குறிச்சி இடைத்தேர்தலைக் குறிவைத்தே மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. எனவே, மத்திய அரசின் இந்தத் திட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது" என்றும் அவர் சந்தேகம் எழுப்பி உள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்