Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்ணின் உயிரைப் பறித்த உப்பு

உப்பு பற்றாக்குறை புரளியால் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். இந்த சோக சம்பவம்  உத்தரபிரேதச மாநிலத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேசம், டெல்லி மாநிலங்களில் உப்பு பற்றாக்குறை புரளி காட்டுத்தீ போல வேகமாக பரவியது. இதனால் உத்தரபிரதேசத்தில் ஒரு கிலோ உப்பு ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து உப்பு பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும் அங்கு போதிய அளவில் உப்பு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.


இந்நிலையில் உத்தரபிரேதச மாநிலத்தில் கான்பூரில் இந்த உப்பு பற்றாக்குறை புரளி ஒரு பெண்ணின் உயிரைப் பறித்துள்ளது. உப்பு பற்றாக்குறை என்று புரளி வெளியானதும் அங்கே  அனைவரும் உப்பு வாங்குவதற்காக சந்தைக்கு சென்றுள்ளனர். அப்போது கான்பூர் அருகே சவிதா என்ற பெண்ணும் உப்பு வாங்க சென்றுள்ளார். இதில் கூட்ட நெரிசலில் சிக்கிய அவர், அருகில் இருந்த கால்வாயில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ