Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பீகாரில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

 

பீகாரில் பத்திரிகையாளர் ஒருவரை மாஃபியா கும்பல் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளது.

பீகாரில் உள்ள இந்தி பத்திரிகை ஒன்றில் பணியாற்றி வந்தவர் தர்மேந்தர சிங். இவர் இன்று காலை அவரது வீடு அருகே உள்ள டீக்கடையில் இருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் இவரை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பீகாரில் சட்ட விரோதமாக கல்குவாரியில் வியாபாரம் செய்யும் மாஃபியாக்களைப் பற்றி தர்மேந்தர சிங் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். எனவே, இந்த மாஃபியா கும்பல்கள்தான் தர்மேந்தரை கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close