Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மண் இல்லாமல் செடி வளர்க்கும் டெல்லி சிறுவன்

டெல்லியில் வாழும் சாந்தனு சிங்கலுக்கு 17 வயது. அவர், உன்னாத் என்ற அமைப்பை, மண் இல்லாமல் செடி வளர்க்கும் தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார். இந்த அமைப்பின் மூலம் தற்போது, மண் இல்லாமல், கோஸ், கீரை வகைகள் போன்ற தாவரங்களை வளர்க்கும் முறையை உருவாக்கி இருக்கிறாராம். தற்போது, அவரது தாவர வளர்ப்பு முறையை உத்தர பிரதேச அரசு பின்பற்ற முன்வந்துள்ளது.


இது பற்றி சாந்தனு,'நகரங்களில் வாழும் மக்கள் அவர்கள் வீட்டுக்குள்ளேயே செடிகள் வளர்க்க, என்ன செய்யலாம்? என்று யோசித்த போதுதான், உன்னாத் அமைப்பை ஆரம்பித்தேன். ஆரம்ப காலகட்டங்களில், கீரை வகைகள் மற்றும் தக்காளி போன்ற தாவரங்களை வளர்த்து வந்தேன். இதற்கு, என் தந்தையின் முழு ஒத்துழைப்பு கிடைத்தது.' என்று கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close