Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘‘அது அப்போ, இது இப்போ''- வடிவேலுவும் கறுப்புப் பணமும்!

ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறுவது ஏழைகளைப் பாதிக்கும் என்று இப்போது சொல்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2014 ஜனவரியில் 2005-ம் ஆண்டுக்கு முந்தைய நோட்டுக்களைத் திரும்ப ப் பெறுவதாக அறிவித்த போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது இதே பி.ஜே.பி கட்சிதான்.

உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி. அது வேறவாய் இது நாற வாய், அது அப்போ, இது இப்போ என சாதாரண மக்களின் கலைஞன் வடிவேலுவின் காமெடி வசனங்கள் இந்த அரசியல் முரண்களில் அழகாய் பொருந்துகிறது.
கறுப்புப் பணத்தை ஒழிக்காது.

2014-ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கறுப்புப் பணத்தை ஒழிக்கப்போவதாக க் கூறி 2005-ம் ஆண்டுக்கு முந்தைய நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அப்போது இது குறித்து பேட்டியளித்த பி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லெக்கி, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை நாட்டுக்குத் திரும்பிக் கொண்டு வருவது குறித்த விவகாரத்தில் அரசின் அறிவிப்பு ஒரு ஜிம்மிக் வேலை மட்டுமின்றி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்த நடவடிக்கை நிச்சயமாக ஏழைகளுக்கு எதிரானது. படிப்பறிவு இல்லாத, வங்கிக் கணக்கு வசதி இல்லாத அப்பாவிகளை திசை திருப்பும் செயல். வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களும், கணக்கே இல்லாதவர்களையும் குறிவைத்து அரசாங்கம் இந்த நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. அரசின் இந்த நடவடிக்கை கறுப்புப் பணப் புழக்கத்தை முற்றிலும் ஒழித்து விடாது என்று கூறி இருக்கிறார்.

ப‌ணக்காரர்களுக்கான கொள்கை

இந்த நாட்டில் உள்ள 65 சதவிகித மக்கள் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள். அவர்கள் குக்கிராமங்களில் வாழும்படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்கள் தங்களின் வாழ்வாரத்துக்கான உழைப்பில் கிடைத்த பணத்தை தங்கள் வீட்டிலேயே சேமித்து வைத்திருக்கின்றனர். அரசின் அறிவிப்பால் இப்போது, கமிஷன் ஏஜென்ட்கள் பலர் அவர்களை அணுகி, உங்கள் பணம் மதிப்பில்லாமல் போய்விடும் என்று அவர்களை அச்சுறுத்தி, பணத்தை மாற்றித் தருவதாக க் கூறி கமிஷன் வாங்கி அவர்களை ஏமாற்றிக் கொள்ளையடிக்கின்றனர். நாட்டில் கறுப்புப் பணம் எவ்வளவு புழக்கத்தில் இருக்கிறது என்றும் அது அப்படியே புதிய ரூபாய் நோட்டாக மாறி விடும் என்றும் நுண்ணறியாத நிலையில் அரசு இருக்கிறது.

சிதம்பரத்தின் கொள்கையானது சாதாரண வேர்வை சிந்த, ரத்தம் சிந்த உழைக்கும் மக்களுக்கானது அல்ல. பணக்காரர்களுக்கானது.  அவரின் கொள்கை சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களை ஒன்றும் செய்யாது. இந்தியாவில் எந்த ஒரு வங்கிக் கணக்கும் இல்லாதவர்களைத்தான் பாதிக்கும். அமெரிக்க டாலராகவோ அல்லது வேறு நாட்டின் கரன்சியாகவோ கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்களை இது பாதிக்காது. இந்திய ரூபாயாக வைத்திருப்பவர்களைத்தான் இது பாதிக்கும் என்று அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தையும் பி.ஜே.பி வறுத்தெடுத்து இருக்கிறது.

பி.ஜே.பி-க்கும் பொருந்தும் வார்த்தைகள்...

இதை வரிகளை இப்போது காங்கிரஸ் தலைவரின் பெயரைப் போட்டு அவர் சொன்னதாகச் சொன்னாலும் பொருத்தமாக இருக்கிறது.   ஆனால், அப்போதைய நிலையை விட இப்போது ஏராளமானவர்கள் வங்கிக் கணக்குத் தொடங்கி இருக்கின்றனர். 2005-ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட நோட்டுக்களை மட்டுமே மன்மோகன் அரசு திரும்ப ப்பெற்றது. அதற்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. சில முறை அந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படவும் இல்லை. தேர்தல் வந்ததால் அது கைவிடப்பட்டது. அமலுக்கு வராத திட்டத்தையை எதிர்த்த பி.ஜே.பி இப்போது முன்னறிவுப்பு இன்றி திடீரென ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றிருக்கிறது பி.ஜே.பி அரசு. இப்போது உண்மையில் ஏழைகளை பாதிக்கும் திட்டத்தை அறிவித்தது மோடி அரசுதான். ஆம் ஆத்மிக்கான அரசு என்று மார்தட்டிக் கொள்வதில் அர்த்த‍மே இல்லை.

-கே.பாலசுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ