Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து பணியாற்ற தயார்' - மம்தா

கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு ஆரம்பம் முதலே கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருபவர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா. இந்நிலையில் நேற்று கொல்கத்தாவில் உள்ள ஏ.டி.எம் மையங்கள் மற்றும் வங்கிகளுக்கு சென்று மம்தா பார்வையிட்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏ.டி.எம்களிலும் பணம் இல்லை. மக்கள் அவதியடைந்துள்ளனர். மத்திய அரசின் இதுபோன்ற திட்டங்களை எதிர்க்க, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற தயார்' என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ