Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர்கள் கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஆர்.எஸ்.புரா பகுதிக்கு அருகே சர்வதேச எல்லையில், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றத்திற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சத்விந்தர் சிங் மற்றும் தாது ஆகிய இருவரும் எல்லை பாதுகாப்பு படையினரின் கூடாரங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது பிடிப்பட்டுள்ளனர்.

மேலும் இது போன்ற பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக பாகிஸ்தான் எண்களுக்கு பகிர்ந்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்திவருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ