Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

UNSC நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு குவியும் ஆதரவுகள் !

ஐ.நா. பாதுகாப்பு சபையில் (UN Security Council) நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு, ஆதரவு வலுத்துள்ளது. இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் உட்பட, பல ஐ.நா. உறுப்பு நாடுகள் கடந்த வாரம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பொதுக் கூட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன.

ஐநா பாதுகாப்பு சபை 15 நாடுகளைக் கொண்ட அதிகாரமிக்க அமைப்பாகும். இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. மீதி 10 இடங்கள், நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்தவும், நிரந்தர உறுப்பினராகவும் இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவுக்கு ஆதரவாக உறுப்பு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ