Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வடகிழக்கு பகுதியில் புதிய தூர்தர்ஷன் சேனல்

மத்திய அரசின் பிரசார் பாரதி, வடகிழக்கு பகுதியில் புதிய சேனல் ஒன்றை ஆரம்பிக்க உள்ளது. 'டிடி அருண்பிரபா' என்ற பெயரில் ஆரம்பிக்க உள்ள இந்த சேனல், அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் தனது கவனத்தை செலுத்தும் என்றாலும் மற்ற வடகிழக்கு மாநிலங்களிலும் ஒளிபரப்பப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.


அடுத்த மாதம் 25-ம் தேதி முதல் இதன் ஒளிபரப்பு ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பிரசார் பாரதியின் தலைவர் சூரிய பிரகாஷ்,'புதிய சேனல் ஒளிபரப்பப் போவது பற்றி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். வடகிழக்கு பகுதியில் அதிகமாக கவனம் செலுத்த முயற்சிப்போம்.' என்றார்.

இந்த சேனலில், உள்ளூர் மொழிகளைத் தவிர்த்து, பல நிகழ்ச்சிகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒளிபரப்பப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ