Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் மட்டுமல்ல...அனைத்து பழைய நோட்டுக்களும் ஒழிக்கப்படும் - சக்திகந்த தாஸ் பிரத்தியேக பேட்டி

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது. புதிய 500 ரூபாய் (தமிழகத்துக்கு இன்னும் வரவில்லை) மற்றும் 2000 ரூபாய் புதிய வடிமைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
 
புதிய வண்ணம், வடிவமைப்பில் 1000 நோட்டு..!,

டெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஊடகத் செய்தித் துறை ஏற்பாடு செய்திருந்த ஊடகங்களின் பொருளாதார ஆசிரியர்கள் மாநாடு மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறையின் செயலாளர் சக்திகந்த தாஸ் பங்கேற்றார்.

அப்போது அவரிம் கறுப்பு பண ஒழிப்பு விவகாரம் குறித்து கேட்டபோது ''புதிய 1000 ரூபாய் நோட்டுகள்  புதிய வண்ணத்தில், புதிய வடிவமைப்பில், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் சில மாதங்களில் வெளியிடப்படும்."  என  தெரிவித்தார்.

அவரிடம், '' தற்போது புழக்கத்தில் இருக்கும் மற்ற நோட்டுகளும் மாற்றப்படுமா?" என்று கேட்ட போது, ''இதர 100, 50 ரூபாய் தாள்களும் புதிய வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் புதிதாக வெளிடப்படும்" என்றார்.

''ஏன் அதிக மதிப்பில் ரூபாய்தாள் அதாவது 2000 ரூபாய்  நோட்டு கொன்டு வரப்பட்டது" என்று நாம் கேட்டபோது சக்திகந்த தாஸ், ''அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று மக்கள் அதிக எண்ணிக்கையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு, புதிய நோட்டுகளை 2000 ரூபாய் மதிப்பில் எளிதாக  எடுத்துச் செல்ல வசதியாகவும், ரிசர்வ் வங்கி தரப்பில் நாட்டின் இதர பகுதிகளுக்கு உயர் மதிப்பில் பணத்தை எளிதில் விநியோக்க வசதியாகவும்  கொண்டு வரப்பட்டது. அடுத்தக் காரணம், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் (2000--2001) 1000 ரூபாய் நோட்டு புதிதாக வெளியிடப்பட்டது. இப்போது விலைவாசி உயர்ந்திருப்பதால் 2000 ரூபாய் நோட்டு புதிதாக வெளிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.

பழைய 500, 1000 நோட்டுகள் செல்லாதது என அறிவிக்கப்பட்டதன் பின்னணி..!

மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய்தாள் செல்லாது என அறித்ததில் முக்கிய பின்னணியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் போலி ரூபாய்தாள்களை கோடிக்கணக்கில் புழக்கத்தில் விட்டது காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அடுத்த முக்கிய காரணம், நாட்டில் அதிகரித்துள்ள கறுப்பு பண புழக்கம் மற்றும் பதுக்கல் ஆகும்.

பழைய 500, 1000 நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்து, புதிய வடிமைப்பில் 500, 2000 நோட்டுகளை வெளியிட நடவடிக்கை கடந்த சில மாதங்களாக ரகசியமாக மேற்கொள்ளப்பட்டது.

புதிய ரூபாய் நோட்டுகள் வடிமைக்கும் பணியில் ஓரிரு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மட்டும் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் என்ன மதிப்பில் புதிய நோட்டுகளை வெளியிடுவது என்கிற விவரத்தை மத்திய அரசு மிக ரகசியமாக வைத்திருந்தது.

இந்த அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பல நாள்கள் நள்ளிரவு வரைக்கும் கூட நீண்ட ரகசிய கூட்டங்களை நடத்தி இருக்கிறார்.

 

- சி.சரவணன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ