Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் நாளை பள்ளிகள் திறப்பு

ஜம்மு- காஷ்மீர் எல்லையில் உள்ள 174 பள்ளிகள் மீண்டும் நாளை முதல் திறக்கப்பட உள்ளன.  

காஷ்மீரில் கடந்த மூன்று மாதங்களாக நடந்த கலவரம், பாகிஸ்தான் அத்துமீறல் உள்ளிட்ட பிரச்னைகளால் பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நாளை முதல் பள்ளிகள் இயங்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

மேலும் ஜம்மு- காஷ்மீர் பள்ளிகளில் சுமார் 55,000 மாணவர்கள் நாளை பத்தாம் வகுப்பு தேர்வு எழுதப் போவதாகவும், 45,000 மாணவர்கள் இன்று 12-ம் வகுப்பு தேர்வு எழுதுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ