Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாக்கடையில் வீசப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டு குவியல்!

அசாம் மாநிலம், கவுகாத்தியில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் குவியல் குவியலாக சாக்கடையில் தூக்கி வீசப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்தார். இந்த அறிவிப்பால் கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களுக்கு கறுப்புப் பணத்தை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் முழித்து வருகின்றனர். காரணம், 2.5 லட்சத்துக்கு மேல் பணத்தை மாற்றினாலோ அல்லது டெபாசிட் செய்தாலோ அவர்களை வருமானவரித்துறையினர் கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தங்களிடம் உள்ள பணத்தை எரித்து வருகின்றனர். இதனிடையே, அசாம் மாநிலம், கவுகாத்தியில் ருக்மணிநகர்  பகுதியில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் குவியல் குவியலாக சாக்கடையில் தூக்கி வீசப்பட்டுள்ளது. 

இந்த ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகளா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close