Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடி மீது சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

கடந்த வாரம் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததில் இருந்து, பல அரசியல் தலைவர்கள் இந்த நடவடிக்கை பற்றி கருத்து கூறி வருகின்றனர்.

இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, 'பிரதமர் மோடியே 2014-ம் ஆண்டு 90 சதவீத கறுப்பு பணம் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி இருந்தார்.

அப்படி வைத்திருப்பவர்கள் பட்டியலும் அவரிடம் உள்ளது. ஆனால், அதை வெளியிட அவர் தயங்குகிறார். யாரும் பையில் பணத்தை எடுத்து வந்து தீவிரவாதத்தை வளர்ப்பதில்லை, அதெல்லாம் இணைய வழி பரிமாற்றல் மூலமே நடக்கிறது.

பொது பயன்பாடு மற்றும் மாநில அளவிலான பயன்பாட்டுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் மறுபடியும் புழக்கத்தில் விட வேண்டும். புதிய ரூபாய் நோட்டுகளை யாருமே வாங்காதபோது, அதை வெளியிட்டு என்ன பயன் ' என்று கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ