Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘சகோதரிகளே.. உங்கள் சகோதரன் நான் உயிருடன் இருக்கும் வரை..!’ - மோடி நம்பிக்கை

பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் கங்கையின் குறுக்கே பாலம் அமைக்கவும், கசிபூர் ரயில் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

ரயில்வே திட்டப் பணியை தொடங்கி வைத்து பேசிய மோடி, “ நாட்டில் ஏழை மக்கள் தற்போது நிம்மதியாக தூங்குகின்றனர். கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கு மக்களின் வாக்குகள் உதவின. தற்போது மத்திய அரசின் ரூபாய் நோட்டு மாற்ற நடவடிக்கையால் ஊழல்வாதிகள் கலக்கத்தில் உள்ளனர்.

என் எதிரிகள் சக்தி வாய்ந்தவர்கள். ஆனால் நான் பயப்பட மாட்டேன். சத்தியம் மற்றும் ஒருமைப்பாடு பாதையை விடமாட்டேன். எதிரி நாடு கள்ள நோட்டுகளை இந்தியாவில் புழக்கத்தில் விடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”, என்றார்.

மேலும், ”பெண்கள் சிறுகச் சிறுக சேமித்த பணத்தையும், மகளின் திருமணத்துக்குச் சேர்த்து வைத்த பணத்தையும் பிரதமர் அபகரித்து விட்டார் என பெண்களை பலர் தூண்டிவிடுகின்றனர். நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் என் தாய் மற்றும் சகோதரி போன்றவர்கள். உங்கள் சகோதரன் நான் உயிருடன் இருக்கும் வரை, உங்கள் பணத்தை யாரும் அபகரிக்க நான் விடமாட்டேன்” என்று கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close