Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கறுப்புப் பணம் ஒழிக்க இது சரியான வழியா? - சர்வே முடிவுகள்

ழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற, தங்களுக்குத் தேவையான பணத்தை எடுக்க என வங்கிகள், ஏ.டி.எம் மையங்களில் நீண்ட வரிசைகளில் நின்று கொண்டிருக்கிறார்கள் மக்கள். இரண்டு பேர் சந்தித்துக் கொண்டால்கூட, நலம் விசாரிப்புக்கு அடுத்ததாக ‘நீங்கள் பணத்தை மாற்றி வீட்டீர்களா...? என்று பணம் குறித்து உரையாடலாகத் திசைமாறுகிறது. உண்மையில் வங்கிகளில் நீங்கள் சந்தித்த பிரச்னைகளை தெரிவிக்க ‘கறுப்புப் பணம் ஒழிக்க இந்த நடவடிக்கை சரியான வழியா?’என்ற தலைப்பில் சர்வே நடத்தினோம். அதற்கு மக்களிடம் இருந்து வெவ்வேறு பதில்கள் வந்தன. மக்கள் அளித்த பதில்களில் பலர் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என கூறியுள்ளனர். மேலும், வங்கிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால், வங்கி ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள் என தெரிவித்துள்ளனர். கேட்கப்பட்ட மற்ற கேள்விகளுக்கான பதில்கள் கீழே...

எடிட்டர் சாய்ஸ்