Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழைய ரூபாய் நோட்டுகளை 24-ம் தேதி வரை பயன்படுத்தலாம்- ரயில்வே துறை

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதற்கு மாற்றாக புதிய ரூபாய் நோட்டுகளும் உடனடியாக புழக்கத்தில் விடப்பட்டன. ஆனால், பழைய நோட்டுகளை மாற்ற மக்கள் இன்றுவரை போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதனிடையே, பழைய ரூபாய் நோட்டுகளை ரயில் பயணத்துக்கு பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் கூறியிருந்தது. இன்று, அந்த கால அவகாசம் வரும் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ