Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’முழு ஆற்றல் பெற்றுள்ளோம்’,  இந்தியாவை எச்சரிக்கும் நவாஸ் ஷெரிஃப்

இந்திய ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு பிம்பர் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் (LoC) இந்திய ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்,  இந்திய உயர்மட்ட கமிஷனர் கவுதமுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 

இது குறித்து நவாஸ் ஷெரிஃப், ”பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டால், அதற்கு பதிலடி கொடுக்கும் முழு ஆற்றல் பாகிஸ்தானுக்கு உள்ளது. காஷ்மீர் பிரச்னையில், உலக நாடுகளின் கவனத்தை திசைத் திருப்பவே இந்தியா எல்லையில் பதற்ற சூழலை உருவாக்கி வருகிறது” என தெரிவித்துள்ளார். 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close