Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இயல்பு நிலைக்கு திரும்பி வரும் காஷ்மீர்

காஷ்மீரில் சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு பயணிகள் வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 

கடந்த ஜூலை மாதம் 8-ம் தேதியன்று ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்கான்வானி போலீசாரால் கொல்லப்பட்ட மறுநாளில் இருந்து காஷ்மீரில் வன்முறை வெடித்தது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தது. பள்ளிகள் மூடப்பட்டது.  இந்நிலையில் நான்கு மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக இன்று காலை காஷ்மீர் சாலைகளில் பயணிகள் வாகனங்கள் காணப்பட்டன. நேற்று காஷ்மீர் பள்ளிகளில் +2 தேர்வு தொடங்கியது, இன்று பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி 95% மாணவர்கள் தேர்வெழுதி வருகின்றனர். காஷ்மீர் வன்முறையில் இரண்டு போலீசார் உட்பட 85 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ