Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குத் தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம்

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு தடை விதிக்க முடியாது என்றும் மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சங்கர்லால் பாண்டே மற்றும் விவேக் நாராயண் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். அதுமட்டுமின்றி ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் மத்திய அரசின் கருத்தை கேட்காமல் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என மத்திய அரசு சார்பில் அவசரமாக கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.  

இந்நிலையில், இன்று  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது. இந்தப் பிரச்னை தொடர்பாக மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்”, என்று உத்தரவிட்டுள்ளது.  மேலும் வழக்கை 25-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close