Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாயம் போகும் 2000 ரூபாய் - நடிகை திவ்யா ஸ்பந்தனாவின் வீடியோ ஆதாரம்!

மத்திய அரசு பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றாகப் பெறலாம் எனவும் தெரிவித்தது. அதற்குப் பிறகு ஒரு நபருக்கு 4000 முதல் 4,500 ரூபாய் வரை மட்டுமே பெற முடியும் எனவும் அறிவித்தது. இதனை அடுத்து பலரும் அந்த 2000 ரூபாய் தாளில் சேட்டிலைட் சிப் இருப்பதாக பலரும் வதந்திகளை பரப்பி வந்தனர். இதனை மறுத்தது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா. தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் பரவலாக கிடைக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டின் வெளிர் சிவப்பு நிறம் வெளுப்பதாக நிரூபித்து வீடியோவாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் நடிகையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான திவ்யா ஸ்பந்தனா.

தனது வீட்டில் பணிபுரியும் பெண் ஒரு துணியில் தண்ணீர் தொட்டு 2000 ரூபாய் நோட்டை துடைக்கிறார். அந்த துணியில் வெளிரிய நிறம் தெரிகிறது. இந்த வீடியோவை பதிவிட்டவர், என்னால் இதை நம்பவே முடியவில்லை. இதன் மூலம் அவர்கள் நிரூபித்துள்ளனர் எனவும் பதிவிட்டுள்ளார். 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ