Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியின் கோட்டை ஏலம் எடுத்தவரை வைத்து ரூ.6 ஆயிரம் கோடி புரளி!

 6 ஆயிரம் கோடிகுஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் தான் பதுக்கி வைத்திருந்த ரூ.6 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளதாக வெளியான தகவல் உண்மையற்றது எனத் தெரிய வந்துள்ளது. 

நாட்டில் புதிய 2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. பழைய 500 மற்றும்  ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி விட்டு புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் புதிய நோட்டுகளை பெறுவதற்காக வங்கி வாசல்களில் காத்திருக்கின்றனர். பிரதமர் மோடி 50 நாட்களில் பிரச்னை சரி செய்யப்பட்டுவிடும் என நம்பிக்கை அளித்திருக்கிறார். ஆனால், இந்த பிரச்னை தீர குறைந்தது 4 மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

.தற்போது புள்ளிவிபரப்படி நாட்டில் 17 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்பிலான பணம் புழங்குகிறது. இதில் 84 சதவீதம் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள். அதாவது 14 லட்சத்து 50 ஆயிரம் கோடி பெரிய நோட்டுகளாக புழக்கத்தில் உள்ளன. மற்றவை 100 உள்ளிட்ட பிற நோட்டுகள். இந்த ஞாயிற்றுக்கிழமை நிதியமைச்சகம் நவம்பர் 10 முதல் 13-ம் தேதி வரை 50 ஆயிரம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வங்கிகள், ஏடிஎம்கள் மற்றும் போஸ்ட் ஆபிஸ்கள் வழியாக இவை வழங்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 12,500 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகள் பணம் விநியோகிக்க முடியும். அப்படி செய்யப்படும்பட்சத்தில் இந்த நிலை சரியாக 116 நாட்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.  

ஆனாலும் புதியத் திட்டத்தின்படி. வருமான வரித்துறைக்கு கணக்கில் காட்டாமல் பணம் பதுக்கி வைத்திருந்த நபர்கள் அரசிடம் சிக்கி வருகின்றனர். பணத்தை கிழிக்கின்றனர் அல்லது எரிக்கின்றனர். நாட்டின் பல பகுதிகளில் பணத்தை எரிப்பதாகவும் செய்திகளை காண முடிகிறது. இந்த நிலையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர், வருமான வரித்துறைக்கு கணக்கில் காட்டாத சுமார் 6,000 கோடியை மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல் சமூக வலை தளங்களில் பரவி வந்தது. சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் படேல் தன்னிடம் இருந்த ரூ.6000 கோடியை அரசிடம் அப்படியே ஒப்படைத்துள்ளதாக நேற்றில் இருந்து வதந்தி பரவி வந்தது.

அத்துடன் அந்த தொகைக்கான வட்டி ரூ.1800 கோடி. வரியின் மீது 200 சதவீதம் அபராதமும்  விதிக்கப்படும். இதனால் லால்ஜிபாய் வரியாக 5,400 கோடி கட்ட வேண்டும். எஞ்சிய 600 கோடி மட்டுமே அவருக்கு கிடைக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், இந்த தகவல் உண்மையல்ல என தெரிய வந்துள்ளது. இது குறித்து குஜராத்தி மொழியில் பட்டேலின் பேச்சு அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ''தான் அப்படி எந்த ஒரு தொகையையும் ஒப்படைக்கவில்லை. தவறான செய்தி'' என மறுத்துள்ளார். 

இந்த லால்ஜிபாய்தான் பிரதமர் மோடி அணிந்த  கோட்டை ரூ. 4.3 கோடிக்கு ஏலம் எடுத்தவர். இதனால் அவரை மையமாக வைத்து புரளியை கிளப்பி விட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. தர்மநந்தன் டையமண்ட்ஸ் என்ற பெயரில் வைர நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது சொத்து மதிப்பு 480 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்தியாவின் முதல் 10 வைரத் தொழில் அதிபர்களுள் ஒருவர். 

- எம். குமரேசன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ