Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் விவகாரம்: மத்திய அரசுக்கு 82 % பேர் ஆதரவு

நாடு முழுவதும் 500,1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பழைய நோட்டுகளை மாற்ற வங்கிகளிலும், பணம் எடுக்க ஏ.டி.எம்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு குறித்து மீடியா ஆப் ஒன்று கருத்துக் கணிப்பை மேற்கொண்டது.


இந்த கருத்துக் கணிப்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவற்றில் 82 சதவீதத்துக்கு மேற்பட்டோர் மத்திய அரசின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 80 சதவீதம் பேர் 35 வயதுக்குதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் டெல்லி,மும்பை,சென்னை,பெங்களூரு,ஹைதராபாத் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ