Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கறுப்புப் பணம் பொருளாதார மந்தநிலையின் போது உதவியது' சொல்கிறார் இந்த முதல்வர்

கடந்த வாரம் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு  500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது மத்திய அரசு. அதனைத் தொடர்ந்து, கறுப்புப் பணம் பற்றி அரசியல் தலைவர்கள் கருத்து கூறி வரும் நிலையில், அகிலேஷ் யாதவ் சர்ச்சைக்குரிய வகையில் 'கறுப்புப் பணம் பொருளாதார நெருக்கடியின் போது உதவியது' என்று கூறியுள்ளார்.


உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கறுப்புப் பணம் பற்றி,'நான் கறுப்புப் பணம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். ஆனால், உலகில் பல இடங்களில் உணரப்பட்ட பொருளாதார மந்தநிலை, இந்தியாவில் மட்டும் உணரப்படாததற்குக் காரணம், கறுப்புப் பண சந்தை இங்கு பலமாக இருந்தது தான் என பல பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.' என்று கூறியிருக்கிறார்.

எடிட்டர் சாய்ஸ்