Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா-இஸ்ரேல் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து


இஸ்ரேல் அதிபர் ரூவென் ரிவ்லின் 6 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் ரூவென் இன்று சந்தித்து பேசினர். அப்போது விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மேலும், பாதுகாப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், வர்த்தகம், முதலீடு, சைபர் க்ரைம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அப்போது, மோடி கூறுகையில், "இரு நாடுகளுமே தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்" என்றார். ரூவென் கூறுகையில், "மக்கள் உரிமைகளை பாதுகாக்க இரு நாடுகளும் தயாராக உள்ளது. இந்தியாவின் 'மேக் இன் இந்தியா', 'மேட் இன் இந்தியா' திட்டத்துக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவிக்கிறது" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ