Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தால் 25 பேர் மரணம்

500,1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் விவகாரம் ஆதரவுகளையும், எதிர்ப்பலைகளையும் கிளப்பியுள்ளது. இந்நிலையில் இந்த ஒரு வாரத்தில் பணம் வாபஸ் பெறப்படும் விவகாரத்தால் மட்டும் 25 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த முடியாததால் இவர்கள் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


அதன்படி, உத்தரபிரதேசத்தில் ஒருவர் கிராமத்தில் பெட்ரோல் பங்க்கில் 1,000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்ததால், ஒரு தந்தையால் தனது மகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. விளைவு, அவரது 8 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. சூரத்தில் ஒரு பெண்மணிக்கு மளிகைக் கடையில் பழைய நோட்டு வாங்க மறுத்துள்ளனர். விளைவு அந்த பெண்மணி தனது குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியவில்லை என தற்கொலை செய்து கொண்டார். உத்தர பிரதேசத்தில் ஒரு துணி துவைக்கும் பெண்மணி பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்து மரணம்.

மும்பையில் பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சையளிக்க பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து, குழந்தையை வீட்டுக்கு அனுப்பிய மருத்துவமனை. விளைவு அந்த குழந்தை மரணம். இதே போன்று உத்தரபிரதேசத்தில் நடந்த சம்பவத்தில்  2 குழந்தைகள் மரணம். அவற்றில் ஒரு குழந்தைக்கு 1 வயது. மத்திய அரசின் அறிவிப்பில் அதிர்ச்சியான ஹைதராபாத் பெண் விவசாயி தூக்கு மாட்டி தற்கொலை. மேற்கு வங்கத்தில் ஏ.டி.எம்மில் பணம் கிடைக்காத ஆத்திரத்தில் கணவன், தனது மனைவியை கொன்றதாக கூறப்படுகிறது.


இது போல் நாடு முழுவதும் 25 உயிரிழப்புகள் பழைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறும் பிரச்னையில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close