Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பயிர்களின் குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க அமைச்சரவைக்கூட்டம் ஒப்புதல்

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. குறிப்பாக பொருளாதார விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக நடந்த இந்த கூட்டத்தில், அனைத்து பயிர்களின் குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக எண்ணெய் தயாரிப்பு பயிர்களுக்கு குறைந்தபட்ச விலைக்கு மேல் போனஸ் தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.1,625 ஆக உயர்ந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி நதிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக சிறப்பு குழு அமைக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close