Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கி முன் நிர்வாணப் போராட்டத்தில் இறங்கிய முதியவர்! அதிர்ச்சி வீடியோ

பிரதமர் மோடி அறிவித்த 500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பின் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் ஏ.டி.எம்களின் முன்னால் க்யூவில் நின்றவாறு உள்ளார்கள். பெரும்பாலான தனியார் வங்கிகள் கைவிட்ட நிலையில் பொதுத்துறை வங்கிகள் மட்டும் நிலைமையை சமாளிக்கும் வகையில் தங்களால் முடிந்த அளவு 'கரன்சி ரீ ஃபில்லிங்' செய்து வருகிறார்கள்.

வங்கி

பொதுமக்கள் எங்கள் வங்கிகளில் வைத்திருக்கும் பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை என தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் ஒரு தனியார் வங்கி முன் பணம் எடுக்க காத்திருந்த முதியவர் நீண்ட நேரம் காத்திருந்தும் பணம் எடுக்க முடியாததால் விரக்தியாகி விபரீத போராட்டத்தில் இறங்கினார்.

நீண்ட நேர காத்திருப்புக்கு பின் பணம் எடுக்கமுடியாததால் வீட்டுக்கு சென்று தேசியக்கொடியை எடுத்துவந்த அவர் முழு நிர்வாணமாக அந்த வங்கியின் முன் படுத்து போராட்டத்தில் இறங்கினார். காவல்துறை வந்து அவரை சமாதானப்படுத்தியபோது "என்னை கொன்று விடுங்கள். என் பணத்தை அரசே திரும்ப அளிக்க மறுக்கும் போது இந்த உயிர் எனக்கு எதற்கு" என கோபத்துடன் தெரிவித்தார். அதன் பின்னர் வங்கியின் காவலர்களும் காவல்துறையும் இணைந்து அவரை சமாதானப்படுத்தினர். 

பணம் செல்லாது என அறிவித்த பின்னரும் நாளும் புதுப்புது அறிவிப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. ரூபாய் மாற்றுபவர்களின் விரலில் மை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான அறிவிப்புகளினால் எழும் இதுபோன்ற கோபமான சூழலை சமூகவிரோதிகளும் பயன்படுத்துகின்றனர் என்பது கவலை தரும் விஷயமாகும். சில தினங்களுக்கு முன் டெல்லி மெட்ரோ நிலையத்தில் உள்ள டிப்பார்ட்மென்டல் ஸ்டோர் ஒன்று சூறையாடப்பட்டது. இத்தனைக்கும் அங்கு காவலர்கள் போதுமான  அளவு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

  
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close