Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பழைய நோட்டு மாற்றுபவர்களுக்கு விரலில் 'மை' வைத்தது எஸ்பிஐ

பழைய ரூபாய் நோட்டுகள் மாற்ற வருவோருக்கு மை வைக்கும் பணியை முதலில் தொடங்கியுள்ளது எஸ்பிஐ வங்கி. டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்த நடைமுறை வந்துவிட்டது. 

பழைய 500, 1000 ரூபாய் நாேட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி இரவு அறிவித்ததோடு, இந்த நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்று கூறினார். இதைத் தொடர்ந்து 11-ம் தேதி முதல் பொதுமக்கள், வியாபாரிகள் தங்களிடம் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். 

ஒரே நபர் பலமுறை பணத்தை மாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, வங்கிகளுக்கு பணம் மாற்ற வருபவர்களுக்கு இனி கை விரலில் மை வைக்கப்படும் என்று நேற்று அதிரடியாக அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் மீறி இந்த நடைமுறையை மத்திய அரசு இன்று அமல்படுத்தியுள்ளது. 

முதல் கட்டமாக டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில், வங்கிகளுக்கு பணம் மாற்ற வருபவர்களின் இடது கை விரலில் மை வைக்கப்படுகிறது. இந்த நடைமுறையை எஸ்பிஐ வங்கி முதலில் செயல்படுத்தியுள்ளது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வலது ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் அமல் எப்போது?

இதனிடையே, சென்னை உள்பட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மை வைப்பது தாமதமாகும் என தெரிகிறது. தமிழகத்துக்கு மை வர ஓரிரு நாட்கள் ஆகும் என்பதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close