Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொந்தளிப்பை தணிக்க நவாஸ் ஷெரீப் ஆலோசகர் இந்தியா வருகை

பாகிஸ்தான் உயர்மட்ட வெளியுறவு அதிகாரி சர்தாஜ் அஜிஸ், இந்தியாவில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வர உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த பயணத்தின்  மூலம், இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள கொந்தளிப்பை தணிக்க முயற்சி செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவு விவகாரங்களின் ஆலோசகரான அஜிஸ், பாகிஸ்தான்  உள்ளூர் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும்  ’Heart of Asia’ மாநாட்டுக்கு வரவிருப்பதாகவும், இந்த வாய்ப்பை இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க பயன்படுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

19 இந்திய ராணுவ வீரர்களின் உயிரை பலி வாங்கிய  உரி தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவு விவகாரங்களின் ஆலோசகரான அஜிஸ், இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ