Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வராக்கடன் வசூலிக்கும் காலக்கெடுவில் மாற்றமில்லை- ஆர்.பி.ஐ

வராக்கடனை வசூலிக்க வங்கிகளுக்கு முன்னர் விதிக்கப்பட்ட காலக்கெடுவில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் எஸ்.எஸ்.விஸ்வநாதன் கூறியுள்ளார்.

வராக்கடன் வசூலிப்பது பற்றி, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் முன்னரே, 'பொதுத் துறை வங்கிகளில் ஏற்படும் நிதி பிரச்னைகளுக்குக் காரணம் 5 துறைகள் தான். இதைச் சமாளிக்க ஏற்ற நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுக்கும்' என கூறி இருந்தார்.

இந்நிலையில், 'வராக்கடன்களை வங்கிகள் வசூலிக்க ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவான மார்ச் 2017 என்பதில் எந்த மாற்றமும் இல்லை' என ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கூறியுள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ