Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'போதுமான அளவு மை இருக்கிறது'

''வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புது ரூபாய் நோட்டுகளை மாற்ற வருவோருக்கு, தேர்தல் சமயங்களில் பின்பற்றுவது போன்று கையில் மை வைக்கப்படும்'' என்று பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நேற்று அறிவித்திருந்தார். ஒரே நபர் திரும்பத் திரும்ப பணம் வாங்குவதை தடுக்க இந்த நடவடிக்கை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. பணத்தை மாற்றுபவர்களுக்கு, கையில் மை வைக்க 'மைசூர் பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ்' நிறுவனத்தின் மை பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.


இந்நிலையில் அந்நிறுவனம், 'அரசு போதுமான அளவு மை கையிருப்பு வைத்திருக்குமாறு கூறி இருந்தது. எங்களிடம், உடனடியாக பயன்படுத்தும் வகையில் போதுமான அளவு மை இருக்கிறது' என்று கூறி இருக்கிறது. நேற்றிலிருந்து மை வைக்கும் நடைமுறை பெருநகரங்களில் அமலுக்கு வரும் என்று அரசு கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.  

எடிட்டர் சாய்ஸ்

MUST READ