Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

500, 1000 ரூபாய் விவகாரம்: மாநிலங்களவையில் எதிரொலி

மாநிலங்களவையில் பழைய 500, 1000 ரூபாய் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தொடர்ந்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. 

இன்று தொடங்கிய  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் மறைந்த மக்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பிரதமரின் கறுப்புப் பணத்துக்கு எதிரான முன்னறிவிப்பில்லாத நடவடிக்கையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ