Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சச்சின் தத்தெடுத்த கிராமம், நெகிழ வைத்த மக்கள்..!

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தான் தத்தெடுத்த கிராமத்தில் இன்று ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களைத் துவக்கி வைத்தார். 


 

கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புட்டம்ராஜு கண்டிகா என்னும் 600 பேர் கொண்ட கிராமத்தை  சச்சின் தத்தெடுத்தார். அடிப்படை வசதியில்லாத அக்கிராமத்தில் குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி என பெரிய மாற்றத்தை கொண்டு வந்ததாக கடந்த ஆண்டு சச்சினை பலர் பாராட்டினார்கள். 

 



இன்று இரண்டாவது முறையாக கிராமத்துக்குச் சென்று சமூக கூடத்தை திறந்து வைத்த சச்சின்,''கிராம மக்களின் அன்பினால் நெகிழ்ந்துவிட்டேன், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமம் என்று அறிவிப்பதில் பெருமிதம் அடைகிறேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் கிராமத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து பெரு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ