Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய ராணுவத்தினர் 11 பேர் சுட்டுக்கொலை?


பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஏழு பேர் கொல்லப்பட்ட அன்று, சுமார் 11 இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு கொன்றதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஜெனரல் ரகீல் தெரிவித்துள்ளார்.  

கடந்த 13-ம் தேதி பிம்பர் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் செய்தி வெளியிட்டிருந்தது.  
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்,  இந்திய உயர்மட்ட கமிஷனர் கவுதமுக்கு சம்மன் அனுப்பியது. மேலும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஜெனரல் ரகீல் செய்தியாளர்கள் சந்திப்பில், ”கடந்த சில நாட்கள் முன்பு இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்தினருக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான், சுமார் 11 இந்திய ராணுவ வீரர்களை சுட்டு கொன்றது. இந்திய அரசு தனது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது”, என தெரிவித்துள்ளார். 

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ