Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

500, 1000 ரூபாய் விவகாரம்: மாநிலங்களவையை முடக்கியது அதிமுக

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள், அவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. 

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததோடு, இந்த நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வங்கிகளில் குவிய ஆரம்பித்தனர். பணத்தை மாற்றுவதில் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

பிரதமரின் அறிவிப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது, பழைய நோட்டு விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பின.

இந்த நிலையில், மாநிலங்களவை இன்று காலை தொடங்கியதும் அதிமுக உறுப்பினர்கள், அவைத் தலைவர் இருக்கை அருகே சென்று அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவை நடவடிக்கை பகல் 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தால் மக்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close