Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அம்பானி அதானிக்கு அரசின் திட்டம் முன்பே தெரியும்’ : அதிர்ச்சி கிளப்பும் பி.ஜே.பி எம்.எல்.ஏ!

அம்பானி

றுப்புப் பணத்தையும் கள்ளப் பணத்தையும் ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 8-ம் தேதி 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்திருந்தார். ‘‘இதை அறிவிப்பதற்கான முடிவு 10 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு, பரம ரகசியம் காத்து திடீரென அறிவிக்கப்பட்டது’’ என பி.ஜே.பி-யினர் புலங்காகிதம் அடைந்துவருகின்றனர். மோடியின் இந்த முடிவால், பெரும் பணக்காரர்களிடம் இருந்த கறுப்புப் பணம் ஒழிந்துவிட்டது என அவர்கள் கூறி வரும் நிலையில், ‘‘1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற தகவல் அம்பானிக்கும் அதானிக்கும் முன்பே தெரியும்’’ என ராஜஸ்தானைச் சேர்ந்த பி.ஜே.பி சட்டமன்ற உறுப்பினர் பவானி சிங் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.

மோடியின் இந்தத் திடீர் அறிவிப்பு பணக்காரர்கள், சாமான்யர்கள், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த முடிவு பெரும் ரகசியத்துடன் வைக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், ‘‘அதானி, அம்பானி மற்றும் பல பணக்காரர்களுக்கு இந்த முடிவு முன்னமே தெரியும். இந்தத் தகவல் கிடைத்தவுடன் அவர்கள் தக்க ஏற்பாடுகளைச் செய்துகொண்டனர்’’ என பவானி சிங் கூறியிருக்கிறார்.

மேலும் அவர், ‘‘புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் மூன்றாம் தர நோட்டுகள்போல உள்ளன. அதை, பார்க்கும்போது கள்ள நோட்டுகள்போல இருக்கின்றன. 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கும் முன்பு, தேவையான புதிய நோட்டுகள் அச்சிடப்பட்டு கையிருப்பு வைத்திருக்க வேண்டும். ஆனால், இதை எல்லாம் செய்யாமல், நள்ளிரவில் பெட்ரோல் விலை ஏற்றுவதுபோல திடீரென அறிவித்துள்ளார்கள்’’ எனவும் கூறியிருக்கிறார். 

இந்தக் குற்றச்சாட்டுகளை பவானி சிங் வைக்கும் வீடியே சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பவானி சிங், ‘‘சில பத்திரிகையாளர்கள், என்னிடம் வந்து ரூபாய் நோட்டுகள் செல்லாது பற்றிக் கருத்துக் கேட்டார்கள். சாதாரணமாக நான் பேசிக்கொண்டிருந்ததை எனக்குத் தெரியாமல், பத்திரிகை தர்மத்துக்கு மாறாகப் பதிவுசெய்துவிட்டார்கள். வீடியோவில் இருக்கும் எந்த விஷயத்தையும் நான் சொல்லவில்லை’’ என்றார்.

பதவியைத் தக்கவைப்பதற்காக பாதையை மாற்றிக்கொண்டாரோ, என்னவோ?

- ஆ.நந்தகுமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close